Labels

Search This Blog

Saturday, 20 July 2013

வாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.


http://www.facebook.com/pages/Khariharan/115524648579725



power by BLOGSPOT-PING



வாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.. ஒரு சிறந்த ஆன்மீக ஆலோசனை
|
எவ்வளவோ வசதி இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந்தும் - ஒரு சிலருக்கு திருமணம் எளிதில் நடப்பதில்லை.... ஏன் ??

நல்ல வேலை ... கை நிறைய சம்பளம்... ஆனால் கழுத்துக்கு மேல கடன்... எப்படி?

நல்ல திறமை, கடின உழைப்பு... - ஆனா , ப்ரோமோஷன் , இன்கிரிமென்ட் எல்லாம் இது எதுமே இல்லாத , உங்க "கலீக்" க்கு மட்டும்.. உங்களுக்கு , நல்ல அழகா ஒரு பட்டை... நாமம்..!! ஏன் இப்படி நமக்கு மட்டும்?

எவ்வளவோ வசதி இருந்தும், கொஞ்சுறதுக்கு ஒரு குழந்தை இல்லை... ஏன் இப்படி?

இந்த பிறவிலேயோ, இல்லை போன பிறவியிலோ , ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டு இருந்தா.... ஆண்டவன் அடிக்கிறது இந்த மாதிரி தான்...

ஜாதகத்தை நன்றாக பார்க்க தெரிந்தவர்கள் , இதை உடனே கணித்து விடுவார்கள். இதற்கு பெயர் - பிரம்மஹத்தி தோஷம். யார் ஒருவர் ஜாதகத்தில், சனி , குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர் , பார்த்து இருந்தாலோ - 99 % அவருக்கு - பிரம்மஹத்தி தோஷம் - இருப்பதாக அர்த்தம்..... நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும் , இது பொருந்தும்..

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?

ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் :

1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து , திருமணம் செய்யாமல் இருத்தல்

2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது

3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது

4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது

5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது

6 . சென்ற பிறவிகளில் , ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்

7.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்

4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்

பரிகாரம்:தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று , பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து , ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்.

எனக்கு தெரிந்த அன்பர் ஒருவர் , விடிவு காலம் வராதா என ஏங்கியவர், இதை செய்த 6 மாதங்களில் , ஒரு வழி (ஒளி ) கிடைத்து, ஒரு நிம்மதியான வாழ்வு வாழத் தொடங்கி இருக்கிறார். .... அதிகம் செலவு ஆகாது.. ஆயிரம் ரூபாய் அதிகம்.. ஆனால் பய பக்தி , மன சுத்தம் முக்கியம்...









No comments: